யாழில் போதைப்பொருள் பாவனைக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்(Photos)
போதைப்பொருள் பாவனைக்கு எதிராக இன்று காலை திருநெல்வேலி பொதுச்சந்தை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி முத்து தம்பி இந்து மகா வித்தியாலயத்தில்,பவ்ரல் அமைப்பின் மாற்றத்திற்கான பாதை கற்கை நெறியின் யாழ்.மாவட்ட பெண்கள் குழு நடாத்தும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு செயற்பாட்டு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
விழிப்புணர்வு செயற்பாடு
குறித்த விழிப்புணர்வு செயற்பாடு“போதையினால் பாதை மாறும் இளையோரை நல்வழிப்படுத்தி நற்பிரஜைகளாக உருவாக்குவோம்” எனும் தொனிப்பொருளில் நடாத்தப்படுகின்றது.
இந்த விழிப்புணர்வு செயற்பாட்டின் தொடர்ச்சியாக திருநெல்வேலி பொதுச்சந்தை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த கவனயீர்ப்பில் வீதியோர ஆற்றுகை இடம்பெற்றதுடன் உள்ளூராட்சிமன்ற பெண் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
கல்விக்கரம் உதவிமையத்தின் அனுசரணையுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களின் ஒத்துழைப்பில், தாயகமெங்கும் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் பாவனைக்கெதிரான தொடர் விழிப்புணர்வு பிரச்சாரம் இன்று யாழ்.கொட்டடி - பண்ணை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இன்றைய விழிப்புணர்வு நிகழ்வில் கல்விக்கரம் உதவி மைய நிறுவனர் கருணாகரனும், தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித்தலைவியும் நல்லூர் பிரதேச சபை உறுப்பினருமாகிய வாசுகி சுதாகரும், வலி.தென்மேற்கு பிரதேசசபை உறுப்பினர்கள் ஆகிய ராஜினி சௌந்தரநாயகமும் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் நிரஞ்சன் கலைவாணியும் யாழ்.மாவட்ட ஊடக பொறுப்பாளர் சதீசும் பங்கு பற்றியிருந்தார்கள்.
செய்தி-கஜிந்தன்









