ரில்வின் சில்வாவுடன் வியட்நாம் தூதுவர் சந்திப்பு
மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாள டில்வின் சில்வா மற்றும் இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் திரின் தி டாம் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
பெலவத்தையிலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றுள்ள குறித்த சந்திப்பில் இலங்கைக்கான வியட்நாம் பிரதித் தூதுவர் பிரதித் தூதுவர் லீ வான் ஹோங்கும் கலந்து கொண்டுள்ளார்.
சமீபத்தில் வியட்நாம் குடியரசின் ஜனாதிபதியும் வியட்நாம் கொம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான தோ லாம் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் குறித்து கலந்துரையாடும் நோக்கிலேயே இந்தச் சந்திப்பு நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராஜதந்திர உறவு
இலங்கைக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயம் தொடர்பில் ஜனாதிபதி தோ லாம் பெரும் திருப்தியை வெளிப்படுத்தியதாகக் வியட்நாமிய தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் வியட்நாமிய ஜானாதிபதியின் குறித்த விஜயத்தின் பின்னர் இலங்கையுடனான வியட்நாமின் இராஜதந்திர உறவுகளை விரிவான பங்களிப்பு மட்டத்திற்கு மேம்படுத்திக்கொள்ள முடிந்ததாகவும் அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டுள்ளார்.