வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ். நபரின் விபரீத முடிவு! உயிரிழந்துள்ளதாக தகவல்
வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்களில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் அகதியொருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயிரிழந்த நபர் யாழ்ப்பாணம் - சாவக்கச்சேரி பகுதியைச் சேர்ந்த 37 வயதான நபர் என தெரிவிக்கப்படுகிறது.
வியட்நாமுக்கு கொண்டு செல்லப்பட்ட அகதிகள்
இலங்கைத் தமிழ் அகதிகள் 303 பேருடன் கனடா நோக்கி பயணித்த மீன்பிடிப் படகு மூழ்கியதையடுத்து, அதில் பயணித்தவா்கள், சிங்கப்பூர் அதிகாரிகளால் மீட்கப்பட்டு கடந்த (08.11.2022) வியட்நாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த நிலையில் தாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு மீள திரும்ப போவதில்லை என தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் தெரிவித்து வருகின்றனர்.
எனினும் வியட்நாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை நாடு கடத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தாம் இலங்கையை நோக்கி திரும்ப போவதில்லை எனவும் தெரிவித்து, அகதிகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இருவர் தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளதாக அண்மையில் செய்தி வெளியாகியிருந்தது.
சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்
இந்நிலையில், தற்கொலைக்கு முயற்சித்தவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முன்னதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், தீவிர சிகிச்சை பெற்று வந்த நபரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது.
யாழ்ப்பாணம் சாவகச்சேரியை சேர்ந்த சுந்தரலிங்கம் கிரிதரன் என்ற 32 வயதான குடும்பஸ்தரே மரணமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் பொருளாதார சூழல் காரணமாக புலம்பெயர முயற்சித்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இவருக்கு பிறந்து ஆறு மாதங்களே ஆன பெண் குழந்தையும் இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் உயிரிழந்தவரின் சடலத்தை நாட்டுக்கு கொண்டு வர வழியறியாது
குடும்பத்தினர் தவித்து வருவதோடு, சம்பந்தப்பட்ட தரப்புக்களின் உதவி செய்யுமாறும் குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

முன்னணி குளவிக் கூட்டுக்குக் கல்லெறிகின்றதா? 2 நாட்கள் முன்

ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து நெல்சன் எடுக்கும் படம்.. ஹீரோ, ஹீரோயின் இவர்களா.. சூப்பர் ஜோடி தான் Cineulagam

பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறிய கனடா... ஜஸ்டின் ட்ரூடோவை கடுமையாக விமர்சித்த இலங்கை அமைச்சர் News Lankasri

பாதியில் நின்றுபோன திருமணம்.. முன்னாள் காதலி ராஷ்மிகாவிற்கும் தனக்கும் தற்போது இதுதான் உறவு என கூறிய நடிகர் Cineulagam
