வித்தியா கொலை வழக்கு : முன்னாள் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கடூழியச் சிறைத் தண்டனை
சுவிஸ் குமாரை தப்பிக்க உதவிய வட மாகாண முன்னாள் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.மிஹாலினால் இன்று(20) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வித்தியா கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான சுவிஸ் குமாரை தப்பிக்க உதவியதாக குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்கவுக்கே இவ்வாறு கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடூழிய சிறைத்தண்டனை

இதன்போது, சுவிஸ்குமாரிடம் பணம் பெற்று தப்பிக்க உதவிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட நிலையில் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்கவுக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், 50 ஆயிரம் ரூபாய் குற்றப்பணமும் அறவிடப்பட்டுள்ளது.
மற்றைய சந்தேக நபரான பொலிஸ் உத்தியோகத்தர் சிறிகஜனுக்கும் 4 வருட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதுடன், குறித்த நபர் நாட்டை விட்டு தப்பிச் சென்றதால் அவருக்கு திறந்த பிடியாணையும் வவுனியா மேல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கை சட்டமா அதிபர் திணைக்களம் சார்பாக அரச சட்டத்தரணி நிசாந் நாகரட்ணம் நெறிப்படுத்தியிருந்தார்.
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri