கலாசார நிலையத்தை திறந்து வைக்க சென்ற அமைச்சர் - இராஜாங்க அமைச்சர் மீது மக்கள் அதிருப்தி!
குருநாகல் பிரதேசத்தில் கலாசார நிலையமொன்றைத் திறந்து வைக்கச் சென்ற அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர் மீது அப்பகுதியிலுள்ள மக்கள் சிலர் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
நேற்றைய தினம் (11.03.2023) குருநாகல் - பமுனகொடுவ பிரதேசத்தில் கலாசார நிலையம் திறந்து வைக்கும் நிகழ்வில் இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் விதுர விக்ரமநாயக்க (vidura wickramanayake) மற்றும் இராஜாங்க அமைச்சர் டி.பி.ஹேரத் (D.B. Herath) ஆகியோர் சென்றுள்ளனர்.
பல தடவைகள் திறந்து வைப்பு
பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி அமைச்சர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகக் கூறப்படுகின்றது.
இதன்போது, குறித்த கலாசார நிலையத்தைப் பல அமைச்சர்கள் பல தடவைகள் திறந்து வைத்துள்ளதாக அங்கிருந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், அந்த இடத்தில் ஏராளமான பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri
