அமெரிக்கா விமான விபத்து தொடர்பில் வெளியான காணொளி
அமெரிக்காவில் இரண்டு நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற விமானம் - உலங்கு வானூர்தி மோதுகை விபத்து தொடர்பான தெளிவான காணொளி தற்போது வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் செய்திச் சேவை ஒன்றினால் இந்த காணொளி வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த புதன்கிழமை இரவு வொசிங்டனுக்கு மேலே நடுவானில் ஏற்பட்ட இந்த விபத்தின் இரண்டு புதிய கோணங்கள் காணொளி மூலம் காட்டப்படுகின்றன.
67 பேர் பலி
குறித்த காணொளிகளில், விமானமும், உலங்கு வானூரதியும் ஒன்றையொன்று நோக்கிய நிலையில் பறந்து, பின்னர் வெடித்து ஆற்றில் வீழ்வது தெளிவாக காட்டப்படுகின்றது.
இந்த சம்பவத்தில் அமெரிக்க இராணுவ உலங்கு வானூர்தியும், அமெரிக்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் மோதிக்கொண்டது.
சம்பவத்தில் விமானம் மற்றும் உலங்கு வானுர்தியில் பயணித்த 67 பேர் கொல்லப்பட்டமை தற்போது உறுதிச்செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |