ட்ரம்பின் நாடுகடத்தல் அழுத்தம்: பேச்சுவார்தைக்கு தயாராகும் முக்கிய நாடு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அழுத்தத்திற்கு மத்தியில் வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோ அந்நாட்டிற்கான அமெரிக்க தூதரை சந்திக்கவுள்ளமை சர்வதேசத்தின் கவனத்தை பெற்றுள்ளது.
வெனிசுலாவின் தகவல் தொடர்பு அமைச்சகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
அமெரிக்காவும் வெனிசுலாவும் உடைந்த இராஜதந்திர உறவுகள் குறித்து வெவ்வேறான நிலைப்பாடுகளை கொண்டமைந்துள்ள நாடுகளாக பார்க்கப்படுகின்றன.
இரு நாடுகளும் தடை
இரு நாடுகளும் தடைகள், குற்றச் செயல்கள் மற்றும் ஆட்சிக் கவிழ்ப்பு சதி குற்றச்சாட்டுகளால் முறனான போக்கை கையாண்டு வருகின்றன.

இந்நிலையில் குறித்த இரு தரப்பு சந்திப்பில், வெனிசுலாவிற்கான அமெரிக்காவின் நாடுகடத்தல் விமானங்கள் குறித்து விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிரம்ப் தனது "பெரும் எண்ணிக்கையிலான நாடுகடத்தல்" திட்டத்தை செயல்படுத்த அழுத்தம் கொடுத்து வரும் நிலையில், அமெரிக்காவிலிருந்து எவரையும், திரும்பப் பெறபோவதில்லை என தென் அமெரிக்க நாடுகள் மறுப்பு தெரிவித்துள்ளன.
இதன் காரணமாக இருதரப்பு பேச்சுவார்த்தையின் முடிவுகள் குறித்து சர்வதேசம் உற்றுநோக்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இன்னும் 3 நாட்களில் குரு பெயர்ச்சி - இன்னும் 4 மாதங்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகும் ராசிகள் Manithan
7 நாள் முடிவில் மாஸ் கலெக்ஷன் செய்துள்ள ரியோ ராஜின் ஆண்பாவம் பொல்லாதது படம்... இதுவரை எவ்வளவு? Cineulagam