இலங்கை அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஐ.நா மனித உரிமைப் பேரவையின் காணொளி! - அமைச்சர் தினேஸ் கடும் எதிர்ப்பு
ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனித உரிமைப் பேரவையின் டுவிட்டர் காணொளிக்கு இலங்கை அரசாங்கம் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.
இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவினால் இவ்வாறு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை ஆணையாளரின் அலுவலக டுவிட்டர் கணக்கில் இலங்கை போர்க்கால காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தனது வழமையை மீறி செயற்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளது.
?? #SriLanka's failure to address past violations has significantly heightened the risk of #HumanRights violations being repeated – New report highlights worrying trends. @MBachelet calls for international action to ensure justice for past crimes ? https://t.co/CCoyu9XImL pic.twitter.com/CxOiz2YQn6
— UN Human Rights (@UNHumanRights) January 27, 2021
கடந்த கால வன்முறைகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாகவும் மனித உரிமை மீறல்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படுவதாகவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் டுவிட்டர் கணக்கில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இந்த காணொளியில் போர் கால சம்பவங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன் இலங்கை அரசை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் எனக் கூறப்படுகிறது.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 18 மணி நேரம் முன்

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam
