டக்ளஸ் தேவானந்தாவுக்கு பௌத்த தேரர் வழங்கிய அறிவுரை
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கொழும்பு கங்காராம விகாராதிபதி கிருந்தே அஸ்ஸாஜி நாயக்க தேரரை சந்தித்து, ஆசி பெற்றுள்ளார்.
இந்த சந்திப்பு இன்று(11.01.2026) இடம்பெற்றுள்ளது.
விகாராதிபதி வழங்கிய ஆலோசணை
இதன்போது, கொழும்பு கங்காராம விகாராதிபதி, டக்ளஸ் தேவானந்தாவிற்கு சில ஆலோசணைகளையும் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில், பல்வேறு சவால்களை கடந்து வந்த நீங்கள், எதிர்காலத்தினை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும். இந்த நாட்டிலே நியாயமான முறையில் சிந்திக்கின்ற தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் மத்தியில் உங்களின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக உயர்ந்த அபிப்பிராயம் இருப்பதை அவதானிக்க முடிகின்றது என்று விகாராதிபதி தெரிவித்துள்ளார்.
மேலும், திட்டமிடப்பட்ட காரணங்களுக்காக அவதூறு பரப்புகின்றவர்கள் தொடர்பாக அலட்டிக் கொள்ளாமல் மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும், டக்ளஸ் தேவானந்தாவின் அரசியல் செயற்பாடுகளை தொடர்ந்தும் நாட்டு மக்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


சன் டிவியில் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒளிபரப்பாகும் மூன்று திரைப்படங்கள்.. TRP பிச்சுக்கப்போகுது Cineulagam
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri