காசா விவகாரம்: ஐநாவின் தீர்மானத்தை முறியடித்த அமெரிக்கா
காசாவின் போர் நிறுத்தம் தொடர்பாக ஐநா பாதுகாப்பு அமைப்பின்னால் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
அமெரிக்காவினுடைய வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி போர் நிறுத்த தீர்மானத்தை அந்நாடு மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஹாமஸ் அமைப்பிடம் 100க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் இருக்கும் நிலையில், இந்த தீர்மானம் ஹமாஸின் கைகளில் அதிகாரத்தை அளிக்கும் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
வீட்டோ அதிகாரம்
இதன் காரணமாகவே ஐநாவின் தீர்மானத்திற்கு அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரம் மூலம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஐ.நாவுக்கான அமெரிக்காவின் துணை தூதர் ராபர்ட் வூட் , “போர் நிறுத்தம் மற்றொரு போரை உருவாக்கும். ஏனென்றால் நீடித்த அமைதிக்கு இருநாடுகளின் தீர்வை காண ஹமாஸ் விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் இயக்கத்தினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.
ஹமாஸ் இயக்கத்தினரை அழிப்போம் என்ற சூளூரையுடன் இஸ்ரேல் தீவிர தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.
இதனால், மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு காரணமாக இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த பேச்சு வார்த்தையை பல்வேறு நாடுகளும் முன்னெடுத்துள்ளன.
பாதுகாப்பு அமைப்பினால் தீர்மானம்
எனினும், போர் நிறுத்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததுள்ளது.
இதையடுத்து ஐக்கிய நாடுகள் அவை சாசனத்தின் 99வது பிரிவை பயன்படுத்தி அவசர கூட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் அழைப்பு விடுத்திருந்தார் .
இந்தக் கூட்டத்தில் காசாவில் போர் நிறுத்தம் தொடர்பாக ஐநா பாதுகாப்பு அமைப்பினால் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்த தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி நிராகரித்துள்ளது.
{ஐக்கிய நாடுகளில் வீட்டோ அதிகாரம் (United Nations Security Council veto power) எனப்படுவது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளாக இருக்கும் சீனா, பிரான்ஸ், சோவியத் ஒன்றியம் தற்பொழுது ரஷ்யா, ஐக்கிய இராச்சியம் (இங்கிலாந்து), ஐக்கிய அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் கொண்டுள்ள சிறப்பு அதிகாரம் ஆகும்.}
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |