மின் தடையால் ஏற்படவுள்ள மற்றுமொரு சிக்கல்!
புதிய இணைப்பு
நீர் விநியோகத்திற்கான மின்பிறப்பாக்கிகள் இல்லாத பிரதேசங்களில் நீர் விநியோகத்தை மீளமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் நிலவும் மின்வெட்டு காரணமாக பல பகுதிகளில் நீர் விநியோகம் தடைபட்டுள்ளதோடு பல பகுதிகளில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
முதலாம் இணைப்பு
நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின் விநியோக தடை காரணமாக நகர்ப்புற பகுதிகளுக்கான நீர்விநியோகமும் தடைப்படலாம் என மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்தவகையில் மின்சாரத் தடையால் வைத்தியசாலைகளில் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டால், பவுசர்கள் மூலம் நீர் விநியோகம் செய்யப்படும் என நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
பிரதான மின் வளங்கள் பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்று மாலை 5 மணி அளவில் நாடளாவிய ரீதியில் மின் விநியோகம் தடைப்பட்டது.
கொத்மலையில் இருந்து பியகம வரையான மின் விநியோக பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடு முழுவதும் மின்விநியோகம் தடைப்பட்டுள்ளதாக மின்சார சபை தகவல் வழங்கியுள்ளது.
மின்விநியோக தடை
இதன் காரணமாக மின்விநியோக தடை நீடிக்குமேயானால் கொழும்பு உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகளில் நீர்விநியோகமும் தடைப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு கொழும்பில் சில பகுதிகளில் இன்று மாலை 5 மணி முதல் நாளை காலை 9 மணி வரையிலான 16 மணித்தியால நீர்விநியோக தடை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri