நாட்டின் பல பகுதிகளில் வழமைக்கு திரும்பியுள்ள மின் விநியோகம்
புதிய இணைப்பு
நாடளாவிய ரீதியில் சுமார் 80% பகுதிகளுக்கு மின்சாரம் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
இதன்படி, பதுளை, மத்துகம, அவிசாவளை, கம்பஹா, இரத்மலானை மற்றும் கிரிபத்கொட ஆகிய பகுதிகளில் மின்சாரம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த தெரிவித்தார்.
கொழும்பு மற்றும் தென் மாகாணத்தின் பல பகுதிகளில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ள நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் அதனைச் சூழவுள்ள பல புறநகர் பகுதிகள் மற்றும் தென் மாகாணத்திலும் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் இணைப்பு
நாடளாவிய ரீதியில் தடைப்பட்டுள்ள மின்விநியோகம் இன்று இரவு 10 மணியளவில் வழமைக்கு திரும்பும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
கொத்மலையில் இருந்து பியகம வரையான மின் விநியோக பாதையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நாடு முழுவதும் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
மின்சார திருத்த சட்டமூலம் தொடர்பில் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு : மறுப்பு தெரிவித்த அமைச்சர்
இலங்கையில் பல மின்மாற்றிகள் மற்றும் மின் நிலையங்களில் ஏற்பட்ட மின்னல் தாக்கம் காரணமாக நாடளாவிய ரீதியில் மின் தடை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நாடு முழுதும் ஏற்பட்ட பரவலான மின்வெட்டு காரணமாக இணைய இணைப்பில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய நாடு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
Power will be restored islandwide within another two and a half hours says CEB.#SriLanka #PowerCutLK #SriLanka @netblocks Metrics show a decline in internet connectivity across Sri Lanka as the country suffers a widespread power outage. pic.twitter.com/6b1KYtTJL1
— Sri Lanka Tweet ?? (@SriLankaTweet) December 9, 2023
மேலும், துண்டிக்கப்பட்டுள்ள மின் வினியோகத்தை இன்னும் சில மணி நேரத்தில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் பொறியியலாளர் நோயல் பிரியந்த தகவல் வழங்கியுள்ளார்.
இதேவேளை கொழும்பு தேசிய வைத்தியசாலை, அதனை சூழவுள்ள பகுதிகள், புறநகர் பகுதிகள் மற்றும் தென் மாகாணத்திலும் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளதுடன் ஏனைய பகுதிகளிலும் மின்சார விநியோகம் விரைவாக சீரமைக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
நாடு முழுவதும் இன்று(09) மாலை திடீரென மின்சாரம் தடைப்பட்டுள்ளது.
திடீர் மின் தடை காரணமாக நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மின்சாரக் கட்டமைப்பில் திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இவ்வாறு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் மின்சாரக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறை நிவர்த்தி செய்ய இலங்கை மின்சார சபை நடவடிக்கை மேற்கொண்டுவருகின்றது.