கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய நபர்! அதிரடியாக கைது செய்த குற்றப்புலனாய்வு அதிகாரிகள்
சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட அழகுசாதன பொருட்களுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் ரூ. 6 மில்லியன் மதிப்புள்ள மருந்துகள், விதைகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் அடங்கிய பொதி இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளது.
விமான நிலைய பொலிஸ் நிலையத்தில் முன்னிலை
நேற்று (19) அதிகாலை நீர்கொழும்பு பிரதேச குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழு ஒன்று இந்த சோதனையை நடத்தியுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
மோட்டார் வாகனத்தில் சம்பந்தப்பட்ட பொதிகளை ஏற்றிச்சென்ற சந்தேகநபர், அந்த மோட்டார் வாகனத்துடன் கைது செய்யப்பட்டு விமான நிலைய பொலிஸ் நிலையத்தில் முன்னிலைபடுத்தப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பெரியமுல்ல பகுதியை சேர்ந்த 33 வயதுடையவர் ஆவார்.
மேலதிக விசாரணைக்காக சந்தேகநபரும், வழக்கில் உள்ள பொருட்களும் விமான நிலைய பொலிஸாரால் கட்டுநாயக்க சுங்கத் தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கனடாவின் Most Wanted பட்டியலில் முதலிடம் - கோல்டி பிராரை பிடிக்க ரூ.1.6 கோடி பரிசு அறிவிப்பு News Lankasri