ஆசிரியர் வேடத்தில் நகைக்கடைக்குள் நுழைந்த நபரினால் உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி
காலியில் உள்ள நகைக்கடைக்கு ஆசிரியர் வேடத்தில் வந்த நபரொருவர் சுமார் 22,95,000 ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை திருடி தப்பிச்சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
நேற்றுதினம் (17) மதியம் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரத்து செய்யப்பட்ட வங்கி அட்டை
ஆசிரியர் வேடத்தில் கடைக்குள் நுழைந்த சந்தேகநபர் தனது ஆவணங்களை மேசையில் வைத்துவிட்டு ஒரு தங்க நெக்லஸ் வாங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
அதன்படி, கடை உரிமையாளர் தங்க நெக்லஸ்கள் அடங்கிய மூன்று பெட்டிகளை கொண்டு வந்து மேசையில் வைத்துள்ளார்.
இதன்போது சந்தேகநபர் அட்டை மூலம் பணம் செலுத்தும் வசதி உள்ளதா என்று கேட்டுள்ளார். அந்த வசதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் தனது வங்கி அட்டையை கடை ஊழியரிடம் கொடுத்து, இரண்டு இலட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு வருமாறு கூறி அவரை வங்கிக்கு அனுப்பியுள்ளார்.
ஊழியர் வங்கிக்குச்சென்ற பிறகு, சந்தேகநபர் கடை உரிமையாளரிடம் தனது தாயும் சகோதரியும் காதணிகள் வாங்க வருவதாக கூறியுள்ளார்.
பொலிஸார் தீவிர நடவடிக்கை
அதன்படி, காதணிகளை எடுப்பதற்காக உரிமையாளர் கடைக்குள் சென்ற சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட சந்தேகநபர், மேசையில் இருந்த மூன்று பெட்டிகளில் இருந்த அனைத்து தங்க நெக்லஸ்களையும் எடுத்துக்கொண்டு, அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து கடை உரிமையாளர் பொலிஸாரிடம் அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து தொடங்கப்பட்ட விசாரணையில், சந்தேகநபர் அங்கு விட்டுச்சென்ற பொருட்கள் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.
அதன்படி, அவர் ஊழியரிடம் கொடுத்த வங்கி அட்டை, கம்பஹா பகுதியைச் சேர்ந்த ஒருவரின் இரத்து செய்யப்பட்ட அட்டை என்பதை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.
மேலும், சம்பவத்திற்கு முந்தைய நாள் இங்கிரிய பகுதியில் உள்ள ஒரு செய்தித்தாள் கடையில் இருந்து கடையில் விடப்பட்டிருந்த பயிற்சி வகுப்புத் தாள்கள் பெறப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கமைய சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கையில் நோயாளியை காப்பாற்ற உயிரை பணயம் வைத்து போராடிய மக்கள் - தொடருந்து நிலையத்தில் பரபரப்பு சம்பவம்