கால்நடை வைத்திய அதிகாரி தொடர்பில் யாழ். முன்னாள் முதல்வரின் கோரிக்கை
கால்நடை வைத்திய அதிகாரியை ஒப்பந்த அடிப்படையிலாவது நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த யாழ். நகரின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா, அதற்கான தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
யாழ். மாநகர சபையின் மாதாந்தக் கூட்டம் முதல்வர் மதிவதனி தலைமையில் இன்று (14.10.2025) நடைபெற்றுள்ளது.
இதன்போது, அவர் மேலும் கூறுகையில்,
“மாநகர சபையில் எடுக்கப்படும் தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது. அவ்விடயங்கள் குறித்து ஆளுநரிடம் முறையாகக் கோரும் பட்சத்தில் அதை நிறைவேற்றிக்கொள்ள முடியும்.
சன நெருக்கடி
இதனிடையே, யாழ். மாநகரின் 10ஆம் வட்டாரத்தில் துரும்பங்குளம் தூர்வாராமல் இருப்பதால் மழை காலம் ஆரம்பித்துள்ள நிலையில் அதனால் பெரும் அசௌகரியங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
அந்தவகையில், குறித்த குளத்தை துரிதமாக தூர்வார நடவடிக்கை எடுப்பது அவடியம். மேலும், யாழ். மாநகர சபைக்குரிய காணியை நகர அபிவிருத்தி அதிகார சபையிடம் கையளிக்காமல் யாழ். மாநகர சபையே பொறுப்பேற்று அதன் வருமானத்தையும் ஈட்டலாம்.
வேம்படி சந்தியில் உள்ள வியாபார நிலையம் ஒன்றால் ஏற்படும் சன நெருக்கடியை குறைக்க நடவடிக்கை எடுப்பது அவசியம் என ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றியும் அது ஏன் நடைமுறைக்கு கொண்டுவரப்படவில்லை?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





பிக்பாஸ் சீசன் 9 வீட்டிற்குள் வைல்ட் கார்ட் என்றியாக ஆயிஷா: நாமினேஷன் பவர் கொடுத்த விஜய் சேதுபதி! Manithan

ஹமாஸ் வசமிருந்த நான்கு பிணைக்கைதிகள் உடல்கள் மட்டுமே ஒப்படைப்பு: மீதமுள்ள உடல்கள் நிலை என்ன? News Lankasri
