வவுனியாவில் வீரமக்கள் தினம் அனுஸ்டிப்பு!
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 36 வது வீரமக்கள் தினம் வவுனியா கோயில்குளத்தில் அமைந்துள்ள க.உமாமகேஸ்வரன் இல்லத்தில் இடம்பெற்றது.
வீரமக்கள் தினம்
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினரும் வவுனியா மாநகரசபையின் முதல்வருமான சு.காண்டீபன் தலைமையில் நேற்று(13) இடம்பெற்ற இந்நிகழ்வில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் அ.அமிர்தலிங்கத்தின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இவ் வீரமக்கள் தினத்தின் இறுதிநாள் நிகழ்வுகள் எதிர்வரும் 16 ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் கழகத்தின் வவுனியா மாவட்ட முக்கியஸ்தர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்), ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயலாளர் நா.ரட்ணலிங்கம், தமிழரசுக் கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் நா.சேனாதிராஜா மற்றும் கழகத்தின் உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri
