பிரபல பாடகர் பிரியங்கர பெரேராவின் இறுதிச்சடங்குகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு
புதிய இணைப்பு
பிரபல பாடகரும், நடிகருமான பிரியங்கர பெரேராவின் இறுதிச்சடங்குகள் நாளை ( 03) நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் அவரது பூதவுடல் இன்று (செப்டம்பர் 02) பிற்பகல் முதல் பொரளை பகுதியில் உள்ள தனியார் மலர்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.
இவர் பிரபல பாடகராக மட்டுமின்றி பல திரைப்படங்கள் மற்றும் நாடகங்களிலும் நடிகராக பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முதலாம் இணைப்பு
பிரபல பாடகரும் நடிகருமான பிரியங்கர பெரேரா தனது 64ஆவது வயதில் காலமானார்.
நீண்டகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (01) இரவு காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
திரைப்பட நடிகராகவும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற இவர், பிரபல பாடகர் மில்டன் பெரேராவின் புதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

'சுபுன் சதக்', 'சந்துன் கஸே சமன் வெலக்', 'சிகுருலியா', 'அகாத சாகரயே' போன்ற பல காலத்தால் அழியாத பாடல்கள் மூலம் ரசிகர்களின் மனங்களில் நீங்கா இடம்பெற்றிருந்தார்.
திரைப்படங்கள், தொலைக்காட்சி நாகடகங்கள், பாடல்கள் என பல்துறைகளில் திறமைகளை வெளிப்படுத்தியுள்ள பிரியங்கர பெரேரா பல விருதுகளை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னாரது இறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் வெளியிடப்படும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21