வெசாக் போயா தினம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்
இந்த ஆண்டுக்கான வெசாக் பௌர்ணமி போயா தினம் திருத்தப்பட்டு, அது எதிர்காலத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டு வெசாக் பெர்ணமி தினத்தை மாற்றியமைக்கக் கோரி இலங்கையின் மூன்று பௌத்த பீடங்களின் பிரதான தேரர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தனர்.
அமைச்சின் அறிவிப்பு
தற்போது பொதுநிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள நாட்காட்டியில், மே மாதம் 01 ஆம் திகதி வெசாக் பௌர்ணமி தினமாகவும், மே மாதம் 30 ஆம் திகதி ‘அதி பொசன்’ பௌர்ணமி தினமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் மே மாதம் 30 ஆம் திகதியையே வெசாக் பௌர்ணமி தினமாகக் கொள்ள வேண்டும் எனத் தீர்மானித்துள்ளதாக மகாநாயக்க தேரர்கள் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
அதற்கு பதிலளிக்கும் வகையில் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.