தமிழர் பகுதிகளில் இடம்பெற்ற வெசாக் அன்னதான நிகழ்வுகள்
மே மாத பௌர்ணமி நாளன்று உலகில் உள்ள அனைத்து பௌத்தர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை வெசாக் ஆகும்.
இந்த நாளில் பலவித சமய நிகழ்வுகள் புத்தரின் வாழ்க்கை வரலாற்றை முன்னிறுத்தி இடம்பெறும்.
முல்லைத்தீவு
இந்நிலையில் மாங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பொதுமக்களுக்கான ஐஸ் கிறீம் அன்னதானம் வழங்குகின்ற நிகழ்வு இன்று (23) இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் அசோக பெரேரா மற்றும் மாங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நீல் கிரிந்தே உள்ளிட்ட அதிகாரிகளால் ஐஸ் கிறீம் அன்னதானம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
செய்தி - கீதன்
யாழ்ப்பாணம்
வெசாக் தினத்தை முன்னிட்டு இன்று (23) காலை சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்திலும் விசேட பூஜை மற்றும் அன்னதான நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.
சாவகச்சேரிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதாகாரி பாலித செனவிரட்ன தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பௌத்த மதகுருமார்கள் கலந்து கொண்டு விசேட வழிபாட்டு நிகழ்வுகளை நடத்தியிருந்தனர்.
நிகழ்வில் யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், இந்து மத குரு, சாவகச்சேரிப் பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் யாழ்ப்பாண பருத்தித்துறை நகரப்பகுதியில் ஐஸ்கிறீம் வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இதில் நகரப்பகுதிக்கு வருகைதந்த நூற்றுக்கணக்கான சிறுவர்கள், பொதுமக்கள் குழிர்களியை வாங்கி பருகியுள்ளனர்.
செய்தி - கஜிந்தன், எரிமலை