இன்று இரவு ஈரான் மீது கடுமையான தாக்குதல்! ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு
ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா இன்று(11.6.2026) இரவு மிகக் கடுமையான தாக்குதலை நடத்தும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அவரது சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, "ஈரானின் கடற்படை, விமானப்படை, ராடார் கட்டமைப்பு, விமான எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு மற்றும் பிற அனைத்து பாதுகாப்பு வடிவங்களும், அவற்றின் பெரும்பாலான தாக்குதல் திறன்களும் ஏற்கனவே அழிக்கப்பட்டு விட்டன.
ஈரான் மீது தாக்குதல்
இவ்வாறானதொரு பின்னணியில், அமெரிக்கா இன்று இரவு ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதலை நடத்தும்.

அதுமட்டுமன்றி, வெகுதொலைவில் இல்லாத எதிர்காலத்தில் ஒரு கட்டத்தில், நாம் ஈரானின் கார்க் தீவு மற்றும் பிற எண்ணெய் உள்கட்டமைப்பு மையங்களைக் கைப்பற்றுவோம்.
அத்துடன், வெனிசுலாவுடன் நாம் கையாள்வதைப் போலவே ஈரானின் ஒட்டுமொத்த எண்ணெய் மற்றும் எரிவாயு சந்தைகளின் முழுமையான கட்டுப்பாட்டையும் எங்கள் வசம் எடுத்துக்கொள்வோம். இந்த நடைமுறை வெனிசுலா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் மிகச் சிறந்த முறையில் பலனளித்து வருகின்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.