வெருகல் பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம்!
திருகோணமலை மாவட்ட வெருகல் பிரதேச ஒருங்கணைப்பு குழு கூட்டம் இன்று (17) பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது.
வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸின் நெறியாழ்கையின் கீழ் திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரும் வெளி விவகார வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதியமைச்சருமான அருண் ஹேமச் சந்திர தலைமையில் இடம்பெற்றது.
ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
குறித்த கூட்டத்தில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சண்முகம் குகதாசன், இம்ரான் மஹ்ரூப் உள்ளிட்ட வெருகல் பிரதேச சபை தவிசாளர்,உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதில் காணி பிரச்சினைகள் மற்றும் வீதி உட்கட்டமைப்பு வசதி உட்பட எதிர்கால அபிவிருத்தி தொடர்பிலும் பொதுவான மக்கள் பிரச்சினைகளும் கலந்துரையாடப்பட்டன.





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
