வீணான சந்திப்பை விரும்பவில்லை: வெள்ளை மாளிகை தகவல்
உக்ரைன் போர் குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் நேரில் பேச்சுவார்த்தை நடத்தும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டதை அடுத்து, "வீணான சந்திப்பை" தாம் விரும்பவில்லை என்று டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
சண்டையை நிறுத்த மொஸ்கோ மறுத்தது ஒரு முக்கிய பிரச்சினையாக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பில், முன்னதாக, புடாபெஸ்டில் இரண்டு வாரங்களுக்குள் ட்ரம்ப்-புட்டின் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று டிரம்ப் கூறியிருந்தார்.
ட்ரம்ப்-புடின் சந்திப்பு
எனினும் தற்போது, குறுகிய காலத்துக்குள்" ட்ரம்ப்-புட்டின் சந்திப்புக்கு "எந்த திட்டமும் இல்லை" என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இதன்படி, அமைதிக்கான அமெரிக்க மற்றும் ரஷ்ய திட்டங்களுக்கு இடையிலான முக்கிய வேறுபாடுகள், இந்த உச்சிமாநாட்டிற்கான வாய்ப்புகளை குறைத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



