இலங்கையில் மீண்டும் சடுதியாக குறைந்த தங்கத்தின் விலை
புதிய இணைப்பு
நாட்டில் இன்றைய (22) தினம் இரண்டாவது தடவையாகவும் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
அதன்படி நேற்றைய நாளுடன் ஒப்பிடும் போது, ஒரு பவுன் தங்கத்தின் விலை 30,000 ரூபாவினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
செட்டியார் தெருவின் இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று காலை 350,000 ரூபாவாக குறைந்து விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று பிற்பகலில் பவுன் ஒன்றின் விலை 340,000 ரூபாவாக மேலும் குறைவடைந்துள்ளது.
அதேநேரம் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்று காலை 322,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட நிலையில் பிற்பகலில் பவுன் ஒன்று 312,000 ரூபாவாக மேலும் குறைவடைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக 410,000 ரூபாய் வரை அதிகரித்த 24 கரட் தங்கத்தின் விலை தற்போது படிப்படியாக குறைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு
நாட்டில் தங்கத்தின் விலை ரூ.20,000 குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும்போது இன்றைய தினம் வரை ரூ.60,000 குறைந்துள்ளதாககூறுப்படுகின்றது.
அதன்படி, இன்று (22) காலை கொழும்பு செட்டியார் வீதி தங்க சந்தையில் ஒரு பவுண் "22 கரட்" தங்கத்தின் விலை ரூ.322,000 ஆக குறைந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை, ரூ.379,200 என விலை நிர்ணயிக்கப்பட்டது. இதற்கிடையில், வெள்ளிக்கிழமை ரூ.410,000 ஆக இருந்த "24 கரட்" தங்கத்தின் விலை இன்று ரூ.350,000 ஆகக் குறைந்துள்ளதாக கொழும்பு தங்கச்சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட டாப் 3 ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
நேட்டோ தலைவருடன் சந்திப்பு... பிரித்தானியா உட்பட 8 நாடுகள் மீதான வரியை ரத்து செய்த ட்ரம்ப் News Lankasri
அண்ணன்கள் வீட்டில் ஏற்பட்ட அவமானம், அழுத கோமதிக்கு வந்த சந்தோஷ செய்தி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கொண்டாட்ட எபிசோட் Cineulagam
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan