கடந்த ஆண்டில் 2,000 கிலோ கிராம் ஹெரோயின் மீட்பு
கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 2,000 கிலோகிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
நாட்டில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
2025ஆம் ஆண்டில் ஜனவரி 1 முதல் இதுவரை 1,826 கிலோகிராம் ஹெரோயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

2024ஆம் ஆண்டில் இது 832 கிலோகிராமாக இருந்த நிலையில், இவ்வாண்டு அந்த அளவு கணிசமாக உயர்ந்து சுமார் 2,000 கிலோவை எட்டியுள்ளது
. இது நாட்டில் நடைபெற்று வரும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோக வலையமைப்புகளுக்கு எதிரான பாதுகாப்பு படையினரின் தீவிர நடவடிக்கைகளை வெளிப்படுத்துகிறது என அமைச்சர் தெரிவித்தார்.
ஹெரோயினுக்கு கூடுதலாக, ஆயிரக்கணக்கான கிலோகிராம் ICE (கிரிஸ்டல் மெத்தாம்பெட்டமின்), கஞ்சா மற்றும் கொக்கெய்ன் உள்ளிட்ட போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சுமார் இரண்டு லட்சத்து எண்பதோராயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டில் போதைப்பொருள் பரவலை கட்டுப்படுத்த அரசு தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் விஜேபால வலியுறுத்தியுள்ளார்.
பேசியே எதையும் சாதிக்கும் அசாத்திய பேச்சாற்றல் கொண்ட 3 ராசிகள்! உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
Casting Couch இருக்கு.. நிறைய நான் சந்தித்திருக்கிறேன்.. அய்யனார் துணை சீரியல் நடிகை மதுமிதா கூறிய உண்மை Cineulagam