சிறைபிடிக்கப்பட்ட மதுரோ.. ட்ரம்பை கொண்டாடித் தீர்க்கும் வெனிசுலா மக்கள்!
வெனிசுலாவின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் கைதினை அந்நாட்டு மக்கள் விடுதலை கிடைத்து விட்டதாக கூறி கொண்டாடி வருகின்றனர்.
மேலும், ட்ரம்ப் இல்லாமல் இது நடந்திருக்காது, எனவும் குறிப்பிட்டு ட்ரம்பின் நடவடிக்கையை வரவேற்று வருகின்றனர்.
இதற்கமைய, வெனிசுலா மக்கள் வீதிகளில் திரண்டு, தங்கள் தேசியக் கொடிகளை அணிந்துகொண்டு, மதுரோவின் ஆட்சியின் வீழ்ச்சியை கொண்டாடுகிறார்கள்.
யார் நிக்கோலஸ் மதுரோ..
ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, ஒரு சர்வாதிகாரியாக அடையாளப்படுத்தப்படுபவர். அவர் 2013ஆம் ஆண்டு முதல் வெனிசுலாவின் ஜனாதிபதியாக இருந்து வருகிறார்.

அந்நாட்டில் இடம்பெற்ற ஒரு சிறப்பு தேர்தலின் போது 2013இல் பதவியேற்ற அவர், ஆளும் கட்சி சட்டமன்றத்தால் வழங்கப்பட்ட அதிகாரங்கள் மூலம் 2015 முதல் வெனிசுலாவை தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறார்.
🚨MILLIONS OF VENEZUELANS CELEBRATE THEIR FREEDOM
— Basil the Great (@BasilTheGreat) January 3, 2026
The UK lefties are crying their eyes out
They cannot understand why people are happy Maduro is gone
Communism is evil
These people are now free pic.twitter.com/kBNktDH3uX
இதற்கிடையில், வெனிசுலாவில் ஏற்பட்ட பொருளாதார பற்றாக்குறை மற்றும் வாழ்க்கைத் தரம் குறைவு என்பவற்றால் 2014ஆம் ஆண்டில் இருந்து போராட்டங்கள் அதிகரித்தன.
அவை நாடு தழுவிய தினசரி பேரணிகளாகவும், அதிருப்தியை அடக்குவதாகவும், மதுரோவின் புகழ் சரிவதற்கு ஒரு காரணியாகவும் மாறின.
ட்ரம்பின் அச்சுறுத்தல்
இதற்கிடையில், போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் மதுரோ ஒரு பயங்கரவாத தலைவர் என அமெரிக்க அரசாங்கம் குற்றம் சுமத்தியது.

அண்மைக்காலமாக மதுரோவின் அரசாங்கத்திற்கு எதிராக அந்நாட்டில் போராட்டங்கள் தீவிர நிலையில் வெடிக்கத் தொடங்கின.
அதேநேரம், ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுமாறு அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், மதுரோவை வலியுறுத்தி கடும் அழுத்தத்தை பிறப்பித்து வந்தார்.
தொடர்ந்து ட்ரம்பால் விடுக்கப்பட்ட காலக்கெடு மற்றும் எச்சரிக்கைகளுக்கு பின்னரே நேற்றையதினம் அதிரடியாக வெனிசுலாவை தாக்கிய ட்ரம்ப் நிர்வாகம், மதுரோவையும் அவரின் மனைவியையும் அதிரடியாக கைது செய்தது.

பின்னர், அங்கிருந்து அதியுயர் பாதுகாப்புக்களுடன் அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்திற்கு அழைத்து வரப்பட்ட அவர்கள், தற்போது இராணுவ உலங்குவானூர்தியின் மூலம் மன்ஹாட்டன் பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், இந்நடவடிக்கைக்கு பல சர்வதேச நாடுகளும் அமைப்புக்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையிலும் வெனிசுலா மக்கள் வீதியில் இறங்கி கொண்டாடி வருகின்றார்கள். அவர்கள் இதனை விடுதலை என அடையாளப்படுத்தி ட்ரம்பிற்கு நன்றி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.