வெனிசுலா ஜனாதிபதி - மனைவி அமெரிக்க இராணுவத்தினரால் கைது! ட்ரம்ப் வெளியிட்ட தகவல்
புதிய இணைப்பு
வெனிசுவேலா மற்றும் அதன் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவுக்கு எதிராக ஒரு பெரிய அளவிலான தாக்குதலை அமெரிக்கா, வெற்றிகரமாக நடத்தியுள்ளது என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது சமூகஊடக கணக்கில் வெளியிட்டுள்ள பதிவிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையின் போது, ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் பிடிபட்டுத், நாட்டிற்கு வெளியே விமானம் மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமலாக்க அமைப்புகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும். இது தொடர்பாக இன்று காலை 11.00 மணிக்கு (உள்ளூர் நேரம்) மார்-அ-லாகோவில் செய்தியாளர் சந்திப்பு நடைபெறும்.
இந்த விடயத்திற்கு நீங்கள் செலுத்திய கவனத்திற்கு நன்றி என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
வெனிசுலா நாட்டின் தலைநகரான கராகஸில் இன்று( 3) அதிகாலை பல இடங்களில் சக்திவாய்ந்த குண்டு வெடிப்புகள் இடம்பெற்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்கப் படைகள் அங்கு வான்வழித் தாக்குதல்களை நடத்தியிருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.
பயங்கர வெடிச்சத்தம்
முதல் வெடிப்பு வெனிசுலா நேரப்படி அதிகாலை 1.50 மணிக்கு ஏற்பட்டுள்ளதுடன் அதில் ஒன்று மிகவும் சக்திவாய்ந்ததாக இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகரின் பல பகுதிகளில் தொடர்ச்சியான வெடிப்புகள் நிகழ்ந்ததாகவும், அதனைத் தொடர்ந்து கரும்புகை சூழ்ந்ததாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

குறிப்பாக, அரசு அலுவலகங்கள் மற்றும் முக்கிய ராணுவ நிலைகளை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
கராகாஸின் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டதுடன், வெடிப்புகளுக்குப் பிறகு விமானங்களின் சத்தத்தையும் வெனிசுவேலா தலைநகரில் இருந்த செய்தியாளர்கள் அவதானித்துள்ளனர். இந்த வெடிப்புகளுக்கான காரணம் இதுவரை தெளிவாக தெரியவில்லை.
அவசர நிலை
இந்த வெடிப்புச் சம்பவங்களால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் இன்னும் முழுமையாக வெளிவரவில்லை. வெனிசுவேலா அரசின் அறிக்கையின் படி, மிராண்டா, அரகுவா மற்றும் லா குவைரா மாநிலங்களிலும் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.
BREAKING: Explosions are rocking Caracas, Venezuela while their citizens are sleeping, as it appears the so-called "Peace President" trump is starting a war without Congress' approval.
— BrooklynDad_Defiant!☮️ (@mmpadellan) January 3, 2026
Those Epstein files must be really, really bad.pic.twitter.com/B3qohuQx4Z
இதையடுத்து, ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ தேசிய அவசர நிலையை அறிவித்து, பாதுகாப்புப் படைகளை முழுமையாக இயக்க உத்தரவிட்டுள்ளார்.
வெனிசுவேலாவில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகள் செயல்படுகின்றன என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, அமெரிக்கா விரைவில் புதிய நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நிலப்பகுதிகளில் தாக்குதல்கள் “விரைவில்” தொடங்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்க்கது.
Bigg Boss: ரெட் கார்டுடன் வெளியேறும் பாரு, கம்ருதின்... விஜய் சேதுபதியால் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் அரங்கம் Manithan
பார்வதி, கம்ருதீனுக்கு Red Card கொடுத்து வெளியே அனுப்பிய விஜய் சேதுபதி... ரசிகர்கள் கொண்டாடும் புரொமோ Cineulagam