நுவரெலியா மாவட்ட பொலிஸார் விடுத்துள்ள அழைப்பு
குற்றச் செயல்களை தடுக்க பொலிஸாருடன் அனைவரும் இணைய வேண்டும் என நுவரெலியா மாவட்ட பொலிஸ் அதிகாரி பிரியந்த சந்திரசிறி அழைப்பு விடுத்துள்ளார்.
பொது மக்கள் பொலிஸ் பாதுகாப்பு குழுவுக்கு அடையாள அட்டை மற்றும் சான்றிதழ்கள் பெற்றுக்கொடுக்கும் நிகழ்வு ஒன்று இன்று (03.01.2026) கொட்டகலை பகுதியில் இடம்பெற்றபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் பல்வேறு குற்றச்சம்பவங்கள் நாளாந்தம் இடம் பெற்ற வண்ணம் தான் இருக்கின்றன.
கொள்ளைச் சம்பவங்கள்
இதனை பொலிஸாரினால் மாத்திரம் கட்டுப்படுத்த முடியாது.அதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதது.இன்று இதனை பெற்றுக்கொள்வதற்காகவே பொது மக்கள் பொலிஸ் பாதுகாப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது.
இவர்களுக்கும் பொது மக்களுக்கும் குற்றச்செயல்களை தடுக்க பாரிய பொறுப்பு உள்ளது. எனவே குற்றச் செயல்களை தடுக்க பொலிஸாருடன் அனைவரும் இணைய வேண்டும்.

இன்று கொள்ளைச் சம்பவங்களை எடுத்துக்கொண்டால் பெரும்பாலான கொள்ளைச் சம்பவங்கள் தமது அறியாமை மற்றும் கவனயீனம் காரணமாகவே நடைபெற்றுள்ளன.
ஒத்துழைப்பு
உதாரணமாக வீட்டுச் சாவியினை வீட்டுக்கு முன்னால் போடப்பட்டுள்ள கால் துடைப்பானின் கீழ் வைப்பதும் மின் இணைப்பு பெட்டிக்கு மேல் வைப்பதும் சாதாரண விடயமாக மாறியுள்ளன. இதனை திருடர்களும் அறிவார்கள்.

பெரும்பாலான கொள்ளைச் சம்பவங்கள் இப்படி தான் இடம் பெற்றுள்ளன.இவ்வாறான சம்பவங்களை மிகவும் இலகுவாக தடுக்க முடியும்.
இதற்கு பொது மக்கள் பாதுகாப்பு குழுவின் ஒத்துழைப்பு இன்றியமையாததது எனத் தெரிவித்துள்ளார்.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 12 மணி நேரம் முன்
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan