வெனிசுவேலாவை உலுக்கிய நிலநடுக்கத்தில் இடம்பெற்ற நெகிழ்ச்சி செயல்..!
வெனிசுவேலாவில் அடுத்தடுத்து தாக்கிய இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் பெரும் பேரழிவு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், இடிந்து விழுந்த கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு இடையே இருந்து பச்சிளம் குழந்தை ஒன்று அதிர்ஷ்டவசமாக உயிருடன் மீட்கப்பட்ட நெகிழ்ச்சியான தருணம் அரங்கேறியுள்ளது.
ருவன்வெலிசாய சூடாமணிக்கல்லில் 1,500 கோடி ரூபா இரத்தினக்கல் கொள்ளை: கோட்டாபயவிற்கு எதிராகச் சி.ஐ.டியில் முறைப்பாடு
பச்சிளம் குழந்தை
நிலநடுக்கத்தால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட லா குவைரா நகரில், மீட்புப் படையினர் கட்டிடக் குவியல்களுக்கு அடியிலிருந்து அக்குழந்தையை மிகவும் பத்திரமாக வெளியே எடுத்து, அங்கிருந்த அதன் தந்தையிடம் ஒப்படைக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகிப் பலரையும் நெகிழச் செய்துள்ளது.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிரத் தேடுதல் வேட்டையில், சற்று நேரத்திற்குப் பிறகு அந்தக் குழந்தையின் தாயாரும் இடிபாடுகளுக்குள் இருந்து உயிருடன் மீட்கப்பட்டதாக ஏஎஃப்பி (AFP) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
An 18 day old baby rescued from the earthquake rubble in Venezuela is handed back to the Father. Notice the joy and love on everyone’s face especially the Father… can you imagine how he feels right now? pic.twitter.com/LLOUiHWm37
— Leah Rain ✝️🇺🇸🎸🏝️ (@LeahRain77) June 26, 2026