சிறுமி ஒருவரை பாலியல் சீண்டல் செய்த தேரர்!நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
சிறுமியொருவரை பாலியல் சீண்டல் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த அடமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரருக்கு பிணையில் செல்ல அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
பதினைந்து வயதுக்கும் குறைவான சிறுமியொருவரை அவரது தாயின் உதவியுடன் பாலியல் சீண்டல்க செய்துள்ளதாக அநுராதபுரத்தின் எட்டு முக்கிய விகாரைகளின் பிரதம தேரர் (அடமஸ்தானாதிபதி) பல்லேகம ஹேமரத்ன தேரர் மீது குற்றச்சாட்டொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியே குறித்த தேரர் தன்னை தொடர்ச்சியாக பாலியல் ரீதியாக சீண்டல் செய்த விடயத்தை வாக்குமூலமாக வழங்கியுள்ளார்.
கைது
எனினும் குறித்த விடயத்தை பொலிஸாரும் அதிகாரிகளும் அசிரத்தையாக கையாண்டு, ஹேமரத்ன தேரரை கைது செய்யாமல் காலம் கடத்தியிருந்தனர்.

அதன் காரணமாக சிவில் சமூக அமைப்புகள் மத்தியில் பெரும் எதிர்ப்பலை உருவாகத் தொடங்கியது. அதனையடுத்து கடந்த 09ஆம் திகதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட ஹேமரத்ன தேரர், நீதிமன்ற உத்தரவின் பேரில் இம்மாதம் 12ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
எனினும் அதற்கு முன்னதாக அவர் தனியார் மருத்துவமனையொன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த காரணத்தினால் தொடர்ந்தும் மருத்துவமனையில் சகல வசதிகளுடன் தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டார்.
பிணை
அதுகுறித்த எழுந்த கண்டனங்கள் காரணமாக கடந்த13ம் திகதி நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் இன்றைய தினம் வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த ஹேமரத்ன தேரருக்கு எதிரான வழக்கு இன்று அநுராதபுரம் பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது, ஐம்பது லட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகள், ஒரு லட்சம் ரூபா ரொக்கப்பிணை என்பவற்றை சமர்ப்பித்து ஹேமரத்ன தேரரைப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்துள்ளதுடன் அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
you may like this
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri
28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri