கிழக்கு மாகாணத்திற்கு மூன்று மடங்கு அதிகளவான நிதிகள் ஒதுக்கீடு
கடந்த அரசாங்கங்களை விட இந்த ஆட்சிக்காலத்தில் கிழக்கு மாகாணத்திற்கு மூன்று மடங்கு அதிகளவான நிதிகள் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.எல்.எம்.அஸ்மி தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாங்கள் தற்போது இருக்கின்ற காலகட்டத்திலே பாரியளவு நிதி ஒத்தாசைகளைப் பெற்றிருக்கின்றோம். அபிவிருத்தியின் பால் கூடுதலான காசு தற்போதைய அரசினால் எங்களுக்குத் தரப்பட்டிருக்கின்றது.
கடந்த காலங்களிலே நாங்கள் எந்தவிதமான பக்கச்சார்பும் இன்றி, பேதங்களும் இன்றி இந்த மக்களுக்காகச் சேவைகளை வழங்கியிருக்கின்றோம்.
நிதி ஒதுக்கீடு
உதவி உள்ளூராட்சி ஆணையாளர்களுடைய செயல்பாடுகள் அதற்கு ஒத்தாசையாக இருந்திருக்கின்றது. அது மாத்திரமன்றி நாம் இந்த இடத்திலே ஆளுநருக்கும் நன்றி கூற வேண்டும்.
கட்டாயமாக இந்த உள்ளூராட்சி சபையினுடைய பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதிலே மிகக் கூடுதலான அக்கறை கொண்டவர். குறிப்பாக, மாகாண நிதி ஒதுக்கீடுகளிலே எங்களுக்குப் போன முறை 399 மில்லியன் வழங்கப்பட்டிருந்தது.

ஆனால், இம்முறை இது 1000 மில்லியனாக உயர்த்தப்பட்டுத் தரப்பட்டிருக்கின்றது. சபையினுடைய தேவைப்பாடு உங்களுக்குப் பொதுவாக இருக்கிறது.
குறிப்பாக, மாகாண நிதி ஒதுக்கீடுகளிலே எங்களுக்குப் போன முறை 399 மில்லியன் வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இம்முறை இது 1000 மில்லியனாக உயர்த்தப்பட்டுத் தரப்பட்டிருக்கின்றது எனத் தெரிவித்துள்ளார்.