விடுதலைப் புலிகளின் தலைவருக்கும் அரசியல்வாதிகளுக்கும் வித்தியாசமில்லை! தம்மரதன தேரர் காட்டம்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இடையில் வித்தியாசமில்லை என மிஹிந்தலை ரஜ மஹா விஹாரையின் விஹாராதிபதி வலவாங்குனவே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டை அழிவுப்பாதையில் இட்டுச் சென்ற அரசியல்வாதிகளுக்கும், பிரபாரகனுக்கும் வித்தியசாமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
2025ம் ஆண்டில் நாட்டு மக்கள் உண்ண உணவின்றி தவிப்பார்கள் என சர்வதேச நிறுவனமொன்று எதிர்வுகூறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கோவிட் நிதியத்தின் பணம்
சுனாமி பணத்திற்கு என்ன நேர்ந்தது? கோவிட் நிதியத்தின் பணம் என்னவானது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த நாட்டு மக்களுக்கு மிகவும் வேதனை அளித்த வேறும் தரப்பினர் யாருமில்லை எனவும், வயிற்றில் உள்ள குழந்தையையும் இவர்கள் கடனாளியாக்கியுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோகிராம் அரிசி வழங்குவதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளதாகவும், இது ஆறு ஏழு வேளைகளுக்கே போதுமானது எனவும் விஹாராதிபதி தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் பிறந்தவர்களை நாடுகடத்துவதுதான் அடுத்த வேலை: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சூசகம் News Lankasri

பிடிப்பட்ட ரித்தீஷ்.. குத்தாட்டம் போட்ட செல்வி மகன்- காதல் தோல்விக்கு கம்பெனி கொடுத்த அம்மா Manithan
