பிக்கு சம்மேளனத்தின் முன்னாள் அழைப்பாளர் விடுதலை
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்கு சம்மேளனத்தின் முன்னாள் அழைப்பாளர் வண. கல்வெவ சிறிதம்ம தேரர் 2022 ஆம் ஆண்டு அரகலய என்ற காலிமுகத்திடல் போராட்டத்தின் போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றங்களை இழைத்ததாகக் கூறப்படும் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சந்தேக நபருக்கு எதிராக போதிய சாட்சியங்கள் இல்லாத காரணத்தினால் கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் 89 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறிதம்ம தேரர் 2022 நவம்பர் 23 அன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
பயங்கரவாத தடைச்சட்டம்
முன்னதாக, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் சம்மேளனத்தின் முன்னாள் அழைப்பாளர் வசந்த முதலிகேவும் இதே போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்ட தடுப்புக் கட்டளையின் கீழ் இந்த இரண்டு மாணவர் செயற்பாட்டாளர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 90 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |