மன்னாரிலிருந்து சட்டவிரோதமாக தமிழகம் சென்றவர் கைது
சட்ட விரோதமான முறையில் மன்னாரில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடி அரிச்சல் முனை பகுதியை சென்றடைந்த குடும்பஸ்தர் ஒருவர் இன்று (13.11.2025) வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரை பகுதியில் இன்று காலை மரைன் பொலிஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது கடற்கரையில் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த நபரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர் சட்ட விரோதமான முறையில் கடல் வழியாக இலங்கையிலிருந்து தப்பி தனுஷ்கோடி வந்து இறங்கியது தெரியவந்ததையடுத்து அவரை மரைன் பொலிஸார் கைது செய்தனர்.
விசாரணை
அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் இலங்கை மன்னார் வங்காலை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக தமிழகத்திற்குள் சென்றதன் காரணம் குறித்து மரைன் பொலிஸார் மண்டபம் மரைன் பொலிஸ் நிலையத்தில் அவரை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரூ.1.5 கோடி மதிப்பிலான குடியிருப்பு: பென்சிலால் துளையிட்ட நபர்: அதிர்ச்சியூட்டும் வீடியோ காட்சி News Lankasri
ரஜினி, கமல் படத்திலிருந்து சுந்தர் சி திடீர் விலகல்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.. என்ன ஆச்சு Cineulagam