கூட்டு நாடகத்தை அரங்கேற்றும் ஜீவன் தரப்பு: வேலுகுமார் பகிரங்க குற்றச்சாட்டு

Sri Lanka Upcountry People Arumugan Thondaman Jeevan Thondaman
By Rakesh Apr 11, 2024 06:53 PM GMT
Report

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு விடயத்தில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பொதுச்செயலாளரும் கூட்டு நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர் என்று தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார்(M. Velu Kumar) தெரிவித்துள்ளார்..

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,

"பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 30 நாட்களுக்குள் சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் சூளுரைத்திருந்தது.

சீனா மீது பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ள கனடா

சீனா மீது பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ள கனடா

தொழிலாளர்களின் நன்மை

ஆனால், இன்று 28 நாட்கள் கடந்துவிட்டன. எனினும், சம்பள உயர்வு தொடர்பில் முன்னேற்றகரமாக எதுவும் நடக்கவில்லை. இதற்கு இ.தொ.காவின் தலைவர் செந்தில் தொண்டமான்(Senthil Thondaman) மற்றும் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான்(Jeevan Thondaman) ஆகியோரின் கூட்டு நாடகமே பிரதான காரணமாகும்.

கூட்டு நாடகத்தை அரங்கேற்றும் ஜீவன் தரப்பு: வேலுகுமார் பகிரங்க குற்றச்சாட்டு | Velukumar Charges Against Cwc

ஆளுங்கட்சிப் பக்கம் நின்று பதவிகளை வகித்தாலும், அந்தப் பதவி நிலையைத் தொழிலாளர்களின் நன்மைக்காக அவர்கள் பயன்படுத்துவதில்லை.

மாறாக அரசைத் திருப்திப்படுத்துவதே அவர்களின் நோக்கம். தங்களின் இந்தக் கூட்டு நாடகத்தை மூடிமறைக்கவே ஏனைய தொழிற்சங்கங்கள் மீது அவர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்." என்றார்.

இலக்கு வைக்கப்பட்ட ஹமாஸ் தளங்கள்: முக்கிய நிதியாளர் பலி

இலக்கு வைக்கப்பட்ட ஹமாஸ் தளங்கள்: முக்கிய நிதியாளர் பலி

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மறுப்பு

இந்நிலையில், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.வேலுகுமார் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுக்களை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் மறுத்துள்ளது.

கூட்டு நாடகத்தை அரங்கேற்றும் ஜீவன் தரப்பு: வேலுகுமார் பகிரங்க குற்றச்சாட்டு | Velukumar Charges Against Cwc

இதுவரை தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 பைசா கூட சம்பளம் பெற்றுக் கொடுக்காமல் சந்தா மாத்திரம் பெற்றுக்கொண்டு இருக்கின்ற ஜனநாயக மக்கள் முன்னணி கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் சம்பள உயர்வை பற்றி விமர்சிப்பது என்பது பசுத்தோல் போர்த்திய நரி போல் உள்ளது என்று முன்னாள் அமைச்சரும் இ.தொ.காவின் போசகருமான ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், "தொழிலாளர்களுக்குச் சம்பளம் வழங்கக்கூடாது என்று சம்பளப் பேச்சுக்குச் செல்லாத கம்பனிகளை விமர்சனம் செய்யாமல், இ.தொ.கா. சம்பளப் பேச்சுக்குச் செல்லாதது போல் இ.தொ.காவை விமர்சிப்பது என்பது இவர் ஒரு மனநோயாளி போல் காணக்கூடியதாக உள்ளது.

வேலுகுமார் அரசியலுக்கு வந்து கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேலாகியுள்ளது. ஒரு தொழிற்சங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இவர் தோட்டத் தொழிலாளர்களுக்காக இதுவரை 10 பைசா கூட சம்பள உயர்வு பெற்றுக்கொடுத்தது இல்லை என்பதை நினைக்கும்போது இவருக்கு வாக்களித்த மக்களை எண்ணி வேதனை அடைகின்றேன்.

எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு

ஜனாதிபதியுடன் இரகசிய சந்திப்பு

2015 முதல் 2019 வரை வேலுகுமார் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும், அரசில் எந்த அமைச்சு பதவிகளும் வேலுகுமாருக்கு வழங்கப்படவில்லை.

எதிர்க்கட்சியில் இருந்தபோது அமைச்சுப் பதவிக்கு ஆசைப்பட்டு தனது கட்சியின் கொள்கையை மீறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்தும் அவருக்கு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவில்லை.

அவருடைய தகுதி ஆராயப்பட்டே அவருக்கு அமைச்சு பதவிகள் வழங்கப்படவில்லை என்பதை இந்நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். வேலுகுமார் பல முறை ஜனாதிபதியை இரகசியமாகச் சந்தித்து , தனது ஆசையை நிறைவேற்ற முயற்சித்த போதிலும் அது பயனளிக்கவில்லை என்பதால், இ.தொ.கா. அரசில் பதவி வகிப்பதைக் கண்டு மன விகர்த்தியில் குழப்பிக் கொண்டிருக்கின்றார்.

கூட்டு நாடகத்தை அரங்கேற்றும் ஜீவன் தரப்பு: வேலுகுமார் பகிரங்க குற்றச்சாட்டு | Velukumar Charges Against Cwc

தோட்டத் தொழிலாளர்களிடம் சந்தாவைப் பெற்றுக் கொண்டு, 10 பைசா கூட சம்பள உயர்வு பெற்றுக் கொடுக்காத கட்சிதான் வேலுகுமார் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனநாயக மக்கள் முன்னணி.

இதை மூடி மறைத்து விட்டு அன்று முதல் இன்று வரை இ.தொ. கா.பெற்றுக்கொடுத்த சம்பளத்தில் அவர் சந்தா பெற்றுக்கொள்கின்றார். இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமானின் முயற்சியால் பல தொழிற்சங்கப் பிரச்சினைகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட்டுள்ளன.

கனடா மக்களிடையே அதிகரிக்கும் பிரச்சினை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கனடா மக்களிடையே அதிகரிக்கும் பிரச்சினை: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தோட்டத் தொழிலாளர்களுக்கு விரைவாக சம்பளம் 

அதேபோல் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானின் தொடர்ச்சியான சம்பள உயர்வு தொடர்பான ஊடக சந்திப்புகளின்போது, தோட்டத் தொழிலாளர்களுக்கு விரைவில் நியாமான சம்பள உயர்வு கிடைக்கும் எனவும், அதற்கான முழுப் பொறுப்பையும் தான் ஏற்றுக்கொள்வதாகவும், அதற்கான அனைத்து வேலைத்திட்டத்தை அன்று முதல் இன்று வரை அவர் செய்து வருகிறார்.

மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமானின் தலைமையிலான சம்பளப் பேச்சுகளின் போது அவருடைய பின்புலத்தில் இருந்த உயர்மட்ட குழுவில் இ.தொ.கா. தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளர் இராமேஸ்வரன் ஆகியோரும் அங்கம் வகித்தனர்.

கூட்டு நாடகத்தை அரங்கேற்றும் ஜீவன் தரப்பு: வேலுகுமார் பகிரங்க குற்றச்சாட்டு | Velukumar Charges Against Cwc

ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்குப் பிறகு அதே நிதானத்துடன் செயற்படுவதோடு சம்பளம் பெற்றுக்கொடுப்பதில் பின்வாங்காமல் செயற்படுகின்றார். அவருடைய அரசியல் அனுபவத்தின் ஊடாக தோட்டத் தொழிலாளர்களுக்கு விரைவாக சம்பளம் பெற்றுகொடுப்பர் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.

இ.தொ.கா. பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் சம்பளம் அதிகரிக்க வேண்டும் என்பதில் தொடர்ந்தும் அழுத்தம் கொடுத்து வருகின்றார். சம்பள நிர்ணய சபை கூடும் திகதியை அடிப்படையாக வைத்து 30 நாட்களுக்குள் சம்பள உயர்வை பெற்றுக் கொடுத்து விடலாம் என்ற நம்பிக்கையில் சம்பள உயர்வு பெற்றுத் தரப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

தற்போது அது 10 அல்லது 20 நாட்களுக்கு தள்ளிப்போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து கருத்துத் தெரிவித்தது ஒன்றும் உலக மகா குற்றம் கிடையாது. அவ்வாறு இருக்கும் நிலையில், கடந்த காலங்களில் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 சம்பளம் பெற்றுக்கொடுக்க வேண்டும் என இ.தொ.கா. எதிர்க்கட்சியில் இருந்து போராடிக் கொண்டிருக்கும்போது, வேலுகுமார் ஆளும் கட்சியில் 5 வருடம் இருந்து 10 பைசா கூட சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்கவில்லை என்பது ஊர் அறிந்த உண்மை.

நான் மறைந்த தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோருடன் பல கூட்டு ஒப்பந்தத்தில், சம்பளப் பேச்சில் கலந்துகொண்டுள்ளேன்.

இ.தொ.கா. ஒவ்வொரு சம்பளப் பேச்சின் போதும் கடுமையான வாக்குவாதம், போராட்டம் செய்தே சம்பள உயர்வு பெற்றுக்கொடுத்துள்ளது. இ.தொ.காவைப் பொறுத்த மட்டில் ஆறுமுகன் தொண்டமான் மறைந்த போதிலும் அவர் முன்வைத்த 1000 ரூபாவை இ.தொ.கா. பெற்றுகொடுத்தது.

அதேபோல் தற்போது இ.தொ.கா. முன்வைத்த கோரிக்கையை இ.தொ.கா. பெற்றுக்கொடுக்கும். வேலுகுமார் பெருந்தோட்டக் கம்பனிகளின் தரகராகச் செயற்பட்டு, அதிக சம்பளம் தராத கம்பனிகளின் மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்பை இ.தொ.கா. மீது திசை திருப்ப முயற்சிக்கின்றார்.

வேலுகுமார், கம்பனிகளுக்கு எதிராக எந்தவித கருத்தும் தெரிவிக்கவில்லை. இதன்மூலம் இவர் கம்பனிகளின் கைகூலியாகச் செயற்படுவதை அவருடைய அறிக்கையில் வெட்டவெளிச்சமாக காண முடிகின்றது." என்றார்.

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US