அநுர அரசாங்கத்தைச் சாடும் வேலுகுமார்..!

Anura Kumara Dissanayaka Government Of Sri Lanka Sri Lankan Peoples M. Velu Kumar
By Rakesh Oct 29, 2024 02:51 AM GMT
Report

பொருளாதாரப் போரில் இருந்து மக்களை மீட்போம் என சிவப்புத் தோழர்கள் கொக்கரித்தார்கள். ஆனால், இன்று பொருட்களின் விலைகள் எகிறியுள்ளதோடு, தமிழ் மக்களின் பாரம்பரிய பண்டிகையான தீபாவளியைக் கூட சந்தோஷமாகக் கொண்டாட முடியாதளவுக்கு பொருளாதாரச் சுமை காணப்படுகின்றது என புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் நாடாளுமன்ற வேட்பாளர் எம்.வேலுகுமார் (M. Velu Kumar) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில், “ரணில் விக்ரமசிங்க ஆட்சியின் போது வழங்கப்பட்ட அஸ்வெசும கொடுப்பனவு போதாது எனவும், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களின் வாழ்வாதாரம் மேம்படும் எனவும் தேசிய மக்கள் சக்தியினர் கூறிவந்தனர்.

நவம்பர் 03 ஆம் திகதி விசேட தினமாக அறிவிப்பு

நவம்பர் 03 ஆம் திகதி விசேட தினமாக அறிவிப்பு

மக்களின் வாழ்க்கைச் சுமை

எனவே, அஸ்வெசுமவைவிட அதிக கொடுப்பனவு வழங்கப்படும் என மக்கள் எதிர்பார்த்தனர்.

அநுர அரசாங்கத்தைச் சாடும் வேலுகுமார்..! | Velu Kumar Slams Anura Government

ஆனால். அப்படி எதுவும் நடக்கவில்லை. மக்களின் வாழ்க்கைச் சுமையும் குறையவில்லை. மாறாக நாளாந்தம் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றன.

இதனால் பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தீபாவளி பண்டிகை பெருந்தோட்டப் பகுதிகளில் சிறப்பாகக் கொண்டாடப்படும். ஆனால், பொருட்களின் விலைகளைப் பார்க்கும்போது, கொண்டாடுவதை விட்டுவிட்டு திண்டாட வேண்டிய நிலையே காணப்படுகின்றது. 

தேர்தல்தான் முக்கியம்

அதேவேளை, கட்சி தேர்தல் அரசியலைவிட நாடுதான் முக்கியம் என்று தேசிய மக்கள் சக்தியினர் கூறி வந்தனர்.

ஆனால், பிரிக்ஸ் மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தும் ஜனாதிபதி அநுரகுமார செல்லவில்லை. இதன்மூலம் எமக்கு இராஜதந்திர ரீதியில் கிடைக்கவிருந்த பல நன்மைகள் இல்லாமல் போயுள்ளன.

அநுர அரசாங்கத்தைச் சாடும் வேலுகுமார்..! | Velu Kumar Slams Anura Government

நாட்டில் பொதுத் தேர்தல் நடைபெறுவதால்தான் ஜனாதிபதி செல்லவில்லை என கூறப்படுகிறது. நாட்டைவிட தேர்தல்தான் முக்கியம் எனில் அவர்கள் கூறிய மாற்றம் அதுதானா?

பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடும் நடைபெற்றது. அதிலும் ஜனாதிபதி பங்கேற்கவில்லை. அரச தலைவர்கள் மாநாட்டுக்கு அதிகாரிகளை அனுப்புவதன் மூலம் முழு நன்மையும் கிடைக்கப்பெறப் போவதில்லை.

இது தொடர்பில் சிவப்பு தோழர்கள் கூறப்போவது என்ன?” என்றும் வேலுகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

You may like this,


மத்திய கிழக்கு நாடுகளில் போர் நிலைமை - இலங்கையில் லாப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு

மத்திய கிழக்கு நாடுகளில் போர் நிலைமை - இலங்கையில் லாப்ஸ் எரிவாயு தட்டுப்பாடு

வாகன விலைகளில் பெரும் மோசடி: விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

வாகன விலைகளில் பெரும் மோசடி: விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US