வெலிவேரிய பகுதியில் துப்பாக்கிச்சூடு! இருவர் தப்பியோட்டம்
வெலிவேரிய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
வெலிவேரிய, அம்பறலுவ வீதி ஜூபிலி மாவத்தை பிரதேசத்தில் இன்று (05) காலை இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் காரில் பயணித்த நபர் ஒருவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய விட்டு மோட்டார் சைக்கிளை சம்பவ இடத்திலேயே விட்டுவிட்டு சிறிய ரக லொறியில் தப்பிச்சென்றுள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நபர் கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திட்டமிட்ட குற்றவாளியாக கருதப்படும் "கெஹெல்பத்தர பத்மே" என்பவரால் இந்த துப்பாக்கிச் சூடு வழிநடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் "பஸ்போட்டா" என்பவரின் சாரதியாக பணியாற்றியவர் என்றும் தெரியவந்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
அசையா சொத்து மட்டும் ரூ.404 கோடி.. நடிகர் விஜய் வேட்பு மனுவில் குறிப்பிட்ட முழு சொத்து விவரம் Cineulagam
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri