தனிப்பட்ட காரணங்களுக்காக விசாரணைக்குழுவிலிருந்து டிரந்த வெலலியத்த விலகல்
கடந்த மே மாதம் 09ம் திகதி கோட்டா கோ கம போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவில் இருந்து ஒருவர் விலகியுள்ளார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகல்
ஜனாதிபதி சட்டத்தரணி டிரந்த வெலலியத்த என்பவரே இவ்வாறு விசாரணைக்குழுவில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.
அவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவை பிரதிநிதித்துவப்படுத்தி விசாரணை ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.
தனது தனிப்பட்ட காரணங்களின் நிமித்தமாகவே ஆணைக்குழுவை விட்டு பதவி விலகியதாக அவர் தெரிவித்துள்ளார்.

டிரந்த வெலலியத்தவும் ராஜபக்ஷர்களும்
ஞானசார தேரருக்கு எதிரான அத்தனை வழக்குகளிலும் கட்டணமின்றி முன்னிலையாகும் அளவுக்கு அவருடனும், ராஜபக்ச குடும்பத்துடனும் சட்டத்தரணி டிரந்த வெலலியத்த நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளார்.

இதற்கமைய, கோட்டா கோ கம தாக்குதல் சம்பவத்தில் ராஜபக்சர்களுக்கு எதிராக அறிக்கை தயாரிக்க விருப்பமற்ற நிலையில் அவர் ஆணைக்குழுவில் இருந்து விலகியிருக்கலாம் என்று அரசியல் அவதானிகள் தெரிவிப்பதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan