வடக்கு - கிழக்கு மாகாணத்தில் பொதுசனவாக்கெடுப்பின் மூலமாகத்தான் ஒரு தீர்வினை அடையமுடியும்: வேலன் சுவாமிகள்
வடக்கு - கிழக்கு மாகாணத்தில் சர்வதேசத்தினால் நடாத்தப்படுகின்ற பொது சனவாக்கெடுப்பின் மூலமாகத்தான் ஒரு தீர்வினை அடையமுடியும் என தவத்திரு வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
உலக தமிழராட்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்ட 09 பேரது 50ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாணம் வீரசிங்க மண்டபத்திற்கு முன்பாக உள்ள நினைவாலயத்தில் இன்று (10.01.2024) இடம்பெற்றுள்ளது.
இந் நினைவேந்தலினை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இன அழிப்பு
“தமிழீழமானது தொடர்ச்சியாக இனவழிப்புக்கு உட்பட்டு வருகின்ற காரணத்திலே எங்களது இனத்துக்கு சிங்கள அரசாங்கத்தினால் நிகழ்த்தப்பட்ட கொடூரத்தை நினைவு கூறுவது காலத்தின் தேவையாக காணப்படுகின்றது.
அனைவரும் ஓரணியாக திரண்டு நினைவேந்தலினை அனுஷ்டிக்க வேண்டும். இளம் சந்ததியினர்களிடம் நினைவேந்தலினை கடத்த வேண்டும்.
இனவழிப்பு நடைபெற்றுக்கொண்டு இருக்கின்ற தருணத்தில் 50 ஆவது ஆண்டிலே நான்கு அம்ச கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்.
01.வடக்கு கிழக்கு தாயகத்தில் தமிழர்கள் வாழ்ந்துகொண்டு இருக்கும் தருணத்தில் வடக்கு, கிழக்கில் உள்ள இராணுவத்தினர் வெளியேற்றப்பட வேண்டும்.
02.இனவழிப்புக்கு சர்வதேச நீதி வேண்டும்.
03.சர்வதேச நீதிமன்றத்திற்கு இனப்படுகொலையாளிகளை பரப்படுத்தவேண்டும்.
04.ஈழத்தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வினை வடக்கு, கிழக்கு மாகாணத்தில் சர்வதேசத்தினால் நடாத்தப்படுகின்ற பொதுசன வாக்கெடுப்பின் மூலமாகத்தான் அடையமுடியும்” என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
