ஹட்டனில் வாகனங்கள் திடீர் சோதனை
நுவரெலியாவிலிருந்து ஹட்டன் ஊடாக செல்லும் வாகனங்கள் இன்று(9.2.2026) எழுமாறாக திடீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
நுவரெலியா மாவட்ட மோட்டார் போக்குவரத்து துறையின் தலைமை வாகன பரிசோதகர் எம்.எம்.ஜே.சி.பண்டார தலைமையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, பொது போக்குவரத்தில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பேருந்துகள், தனியார் பேருந்துகள்,பொது பிரயாணத்தில் ஈடுபடும் வாகனங்கள், முச்சக்கர வண்டிகள், பார ஊர்திகள் உள்ளிட்ட வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அறிவுறுத்தல்
இந்தநிலையில், ஏழு வாகனங்களில் தேவையற்ற பொது மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய உதிரப்பாகங்கள் பொருத்தப்பட்டிருந்ததுடன் முறையான பராமரிப்பு செய்யாத நிலையில் வாகனங்கள் காணப்பட்டமை கண்டறியப்பட்டுள்ளது.

இதன்போது, இந்த வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற பாகங்களை அகற்றுமாறும் முறையாக பராமரிப்பு செய்து காட்டுமாறு கடுமையாக உத்தரவிடப்பட்டது.
அத்தோடு ஒரு சில வாகனங்களில் அதிக ஒளியினை வெளியிடும் தேவையற்ற மின் விளக்குகள் அகற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டன.
திடீர் சோதனை
அவ்வாறு செய்யாத பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட மோட்டார் போக்குவரத்து துறையின் தலைமை வாகன பரிசேதகர் எம்.எம்.ஜே.சி.பண்டார தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்தில் தற்போது வாகன விபத்துக்கள் அதிகரித்து வருவதனை கட்டுப்படுத்தும் முகமாகவும் பொது மக்கள் வழங்கிய முறைபாடுகளுக்கு அமைவாகவும் இன்றைய தினம் திடீர் சோதனை நடவடிக்கையினை முன்னெடுத்தாகவும் இது தொடர்ந்து மேற்கொள்ள உள்ளதாகவும் எம்.எம்.ஜே.சி.பண்டார குறிப்பிட்டார்.
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam