போலி பதிவு தொடர்பில் நடிகை பேஷானி சிஐடியிடம் முறைப்பாடு
இலங்கை நடிகை பேஷானி ஏகநாயக்க, தன்னை குறிவைத்து சமூக ஊடகங்களில் பரப்பப்பட்ட போலி பதிவு தொடர்பாக குற்றப்புலனாய்வுத் துறையில் (CID) இன்று முறைப்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பாக சிஐடிக்கு வெளியே ஒரு காணொளியை வெளியிட்டு பெஷானி தெரிவித்துள்ளதாவது,
சட்ட நடவடிக்கை
உள்ளூர் செய்தி வலைத்தளத்தின் லோகோவைப் பயன்படுத்தி மோசடியாக நதுன் ராஜபக்ஷ என்ற நபரால் இந்த போலிப் பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்குப் பின்னால் உள்ள அவரது நோக்கம் எனக்குத் தெரியாது. இந்த விஷயத்தில் எனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று வலைத்தளம் மறுத்துள்ளது.
சமூக ஊடகங்களில் இந்தப் பதிவைப் பகிர்ந்தவர்களுடன் சேர்ந்து, அனைத்து ஆதாரங்களையும் சிஐடியிடம் சமர்ப்பித்துள்ளேன்," என்று அவர் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் போலி பதிவைப் பகிர்ந்தவர்கள் மற்றும் கருத்து தெரிவித்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெஷானி மேலும் தெரிவித்துள்ளார்.
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
கண்மணி அன்புடன் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் விஜய் டிவி சீரியல் வில்லன்... யார் தெரியுமா? Cineulagam