கல்வி அமைச்சில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் மாயம்
கல்வி அமைச்சில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் மாயமாகியுள்ளதாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளரின் பெயரில் இறக்குமதி செய்யப்பட்டு பதிவுசெய்யப்பட்ட வாகனங்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய தகவல்களின் பிரகாரம் சுமார் 139 வரையான வாகனங்கள் இவ்வாறு மாயமாகியிருப்பதாக தெரியவந்துள்ளது.
கணக்காய்வு அறிக்கை
தேசிய கணக்காய்வுத் திணைக்களம் கல்வி அமைச்சு தொடர்பில் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் இந்த விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்வதற்காக கல்வி அமைச்சின் செயலாளரைத் தொடர்பு கொள்ள முயற்சித்த போதும் குறித்த முயற்சி பலனளிக்கவில்லை.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Aanadhi அவரால் எழுதப்பட்டு, 17 August, 2025 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.



