வாகன வரியை குறைக்க முடியாது! அரசாங்கம் அதிரடி அறிவிப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தின் படி, வாகன வரிகளைக் குறைக்க முடியாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
அத்துடன், இந்த ஆண்டு வாகன இறக்குமதியில் வரி திருத்தங்கள் எதுவும் இருக்காது என்று ஜனாதிபதியின் மூத்த பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், IMF ஒப்பந்தப்படி, இந்த ஆண்டில் எந்த வரிச் சலுகைகளையும் வழங்க முடியாது என்றும் வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளார்.
வாகன இறக்குமதி
இந்த ஆண்டு வாகன இறக்குமதியிலிருந்து 300 மில்லியன் முதல் 350 பில்லியன் வரையான வருமானத்தை ஈட்ட அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
மின்சார மற்றும் மறுசீரமைக்கப்பட்ட வாகனங்கள் உட்பட பல்வேறு வாகன மாதிரிகள் நாட்டிற்கு வந்துள்ளன.
இருப்பினும், சுங்க அனுமதி இன்னும் நடந்து கொண்டிருப்பதால், மொத்த வரி வருவாயை அரசாங்கத்தால் இன்னும் கணக்கிட முடியவில்லை என்று துமிந்த ஹுலங்கமுவ கூறியுள்ளார்.
இதேவேளை ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் ஜனாதிபதியின் மூத்த பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ தெரிவித்துள்ளார்.

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 2 நாட்கள் முன்

லாபத்தில் வந்த பணம்.., ஊழியர்களுக்கு பைக்குகள், தங்க நாணயங்கள் கொடுத்து அசத்திய டிராவல்ஸ் உரிமையாளர் News Lankasri
