இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகரிக்கப்படும் கட்டணம்
வாகன பதிவு கட்டணம் தொடர்பில் புதிய அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.
இதற்கமைய இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வாகன பதிவு கட்டணம் திருத்தப்பட்டுள்ளது.
அதன்படி, மோட்டார் சைக்கிள்களுக்கான பதிவு கட்டணம் 3,000 ரூபாய், 1600 சிசி அல்லது 1600 சிசிக்கு குறைவான கார்களுக்கு முதல் முறை பதிவு செய்ய 25,000 ரூபாய் அறவிடப்படும்.
பதிவு கட்டண விபரம்

இதேவேளை 1600சிசி மற்றும் 80 கிலோவாட்களுக்கு அதிகமான கார்களுக்கு பதிவுக் கட்டணம் 40,000 ரூபாவாக செலுத்தப்பட வேண்டுமென உரிய வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விசேட நோக்கத்துக்கான வாகனங்கள்

மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு பதிவுக் கட்டணம் 2,000 ரூபாவும், மோட்டார் அம்புலன்ஸ் மற்றும் மோட்டார் சவப்பெட்டிகளுக்கு பதிவுக் கட்டணம் 10,000 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் விசேட நோக்கத்துக்கான வாகனங்களுக்கான முதல் முறை பதிவுக் கட்டணம் 30,000 ரூபா என வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.








Bigg Boss: ரெட் கார்டு குறித்து ஏன் கேட்கக்கூடாது? சான்ட்ராவின் நடிப்பை அம்பலப்படுத்திய போட்டியாளர்கள் Manithan
3ஆம் உலக போரின் தொடக்கமா? அணுகுண்டு வீச தயாராகும் ஈரான்; கிரீன்லாந்திற்கு அடம்பிடிக்கும் டிரம்ப் News Lankasri