இலங்கையில் அதிகரிக்கும் வாகனங்களின் தேவை - விலை அதிகரிப்பு குறித்து வெளியான தகவல்
ஜப்பானில் வாகன ஏல விலைகள் அதிகரித்ததன் காரணமாக உள்ளூர் வாகன சந்தையில் தேவை வேகமாக அதிகரித்து வருவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் செயலாளர் உஸ்மான் அலி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
1000 சிசி முதல் 1500 சிசி வரையிலான இயந்திர திறன் கொண்ட பிரபலமான நடுத்தர ரக வாகனங்களுக்கான விலைகள் அதிகரித்துள்ளன. அத்துடன் ஹோண்டா வெசல், டொயோட்டா ரேய்ஸ் போன்ற மாடல்களுக்கு அதிக தேவை உள்ளது.
சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி
ஏப்ரல் 1, 2026 முதல் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள வாகனங்களின் இறக்குமதியில் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) விதிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இதன் விளைவாக, மொத்த சுங்க வரி சுமார் 2.5% அதிகரிக்கும். உலக சந்தையில் விலை அழுத்தம் மற்றும் நாட்டின் நிதி கட்டுப்பாடுகள் ஆகிய இரண்டு காரணிகளும் எதிர்காலத்தில் நாட்டில் வாகனங்களை வாங்கும் திறனை நேரடியாக பாதிக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
அக்குரேகொட துப்பாக்கிச் சூட்டின் பரபரப்புக் காட்சிகள்.. அதிரடியாக களமிறங்கியுள்ள CID - STF அதிகாரிகள்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |