இலங்கையில் வாகனங்களின் விலை சடுதியாக அதிகரிப்பு
நாட்டில் பயன்படுத்திய கார்களின் விலை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளதாக வாகன விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் விலை வீழ்ச்சியும் டொலரின் பெறுமதி வீழ்ச்சியும் இதற்குக் காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எவ்வாறாயினும், வாகன உதிரி பாகங்களின் விலை, வாகன பராமரிப்பு (சேவை) கட்டணம், காப்புறுதி கட்டணம் மற்றும் குத்தகைக் கட்டணம் ஆகியவற்றில் இருந்து மக்களுக்கு இன்னும் நிவாரணம் கிடைக்கவில்லை என வாகன விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கார்களின் தற்போதைய விலை
தற்போது சந்தையில் விற்பனை செய்யப்படும் பயன்படுத்தப்பட்ட கார்களின் விலை கீழே கொடுக்கப்பட்டுள்ளது,
Premio (2017) – ரூ. 130 லட்சம் முதல் ரூ. 135 லட்சம் வரை
Aqua G (2012) – ரூ. 48 லட்சம் முதல் ரூ. 56 லட்சம் வரை
Vezal (2014) – ரூ. 72 லட்சம் முதல் ரூ. 80 லட்சம் வரை
Fit (2012) – ரூ. 47 லட்சம் முதல் ரூ. 53 லட்சம் வரை
Vitz (2018) – ரூ. 71 லட்சம் முதல் ரூ. 76 லட்சம் வரை
Grace (2014) – ரூ. 69 லட்சம் முதல் ரூ. 74 லட்சம் வரை
X-trail (2015) – ரூ. 83 லட்சம் முதல் ரூ. 100 லட்சம் வரை
WagonR (2014) – ரூ. 38 லட்சம் முதல் ரூ. 45 லட்சம் வரை
Mahindra KUV 100 (2020) ரூ. 38 லட்சம் முதல் ரூ. 45 லட்சம் வரை
Alto japan (2017) – ரூ. 40 லட்சம் முதல் ரூ. 45 லட்சம் வரை
Panda (2015) – ரூ. 19 லட்சம் முதல் ரூ. 23 லட்சம் வரை
Alto (2015) – ரூ. 25 லட்சம் முதல் ரூ. 27 லட்சம் வரை





ஆனந்தியின் கர்ப்பத்திற்கு மகேஷ் தான் காரணமா... பஞ்சாயத்தில் பரபரப்பின் உச்சம், சிங்கப்பெண்ணே சீரியல் Cineulagam

ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri
