அமைச்சர்களுக்கான வரியில்லா வாகன இறக்குமதி திட்டத்தில் இழுபறிநிலை
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வரியில்லா வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் அரசாங்கத்திற்குள் இழுபறி நிலவி வருவதால் அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்க முடியாதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என அரசாங்கத்தின் ஒரு தரப்பினர் கூறிய நிலையில், அதனை பெறக்கூடாது என மற்றைய தரப்பினர் கூறியதால் இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இத்தருணத்தில் எம்.பி.க்கள் வரியில்லா வாகன உரிமம் பெற்றால் அது மக்களை வெறுப்படையச் செய்யும் என அரச தரப்பினர் சிலர் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்திற்கு பாரிய அச்சுறுத்தல்
இவை அரசாங்கத்தின் வாக்காளர் முறைமைக்கு பாரிய அச்சுறுத்தலாக அமையும் எனவும் மேலும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எவ்வாறாயினும், பல வருடங்களாக வாகன அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளப்படாத நிலையில், இந்த நேரத்தில் அதனை பெற்றுக்கொள்வதே பொருத்தமானது என அரசாங்கத்தின் மற்றுமொரு குழுவினர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன இறக்குமதிக்கான அனுமதிப்பத்திரம் வழங்குவது தொடர்பில் அரசாங்கம் இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை.
அரசாங்கத்திற்குள் இழுபறிநிலை
தேர்தலுக்கு முன்னர் வரியில்லா வாகன அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு கோரி ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சி நாடாபாராளுமன்ற உறுப்பினர்கள் குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் அண்மையில் கடிதமொன்றினை கையளித்திருந்தனர்.
இதேவேளை, வாகன அனுமதிப்பத்திரம் கிடைக்காவிடின் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் வரியில்லா வாகன அனுமதிப்பத்திரம் தொடர்பில் அரசாங்கத்திற்குள் இழுபறி நிலவி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |