எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச்சென்ற வாகனம் குடைசாய்ந்து விபத்து
அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் கோமாரி பாலத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற கனரக வாகனமொன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவம் இன்று(9) காலை 10.40 மணி அளவில் இடம்பெற்றுள்ளதாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அக்கரைப்பற்றிலிருந்து பொத்துவிலுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற கனரக வாகனத்தின் டயர் வெடித்ததனாலேயே இவ்வாறு வாகனம் குடை சாய்ந்து இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரியவருகின்றது.
இச்சம்பவத்தின் போது சாரதியின் பிரயத்தனத்தால் வாகனத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து வாகனம் பாலத்தின் கீழே விழாமல் தவிர்க்கப்பட்டதுடன், சிலிண்டர்கள் வீதியில் விழுந்து சிதறிக் கிடந்தன. எனினும் அதிர்ஷ்டவசமாக எதுவும் வெடிக்கவில்லை. இதனால் சிறிது நேரம் இப்பாதையால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்த விசாரணையை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

                                            
                                                                                                                                    
    
    
    
    
    
    
    
    
    
    உலக கோப்பை வென்று சாதனை படைத்த இந்திய மகளிர் அணி.. தளபதி விஜய் முதல் சமந்தா வரை பிரபலங்கள் வாழ்த்து மழை Cineulagam