வாகன இறக்குமதிக்கான அனுமதி! அரசாங்கம் வழங்கியுள்ள உறுதிமொழி
எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் மீண்டும் வாகனங்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
வாகன இறக்குமதி தொடர்பில் இனிவரும் நாட்களில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி உரிய முறையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அந்த சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் மெரெஞ்சிகே(Indika Sampath Merenchige) தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் உறுதிமொழி
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
பெப்ரவரி மாதத்தில் இருந்து நிச்சயமாக வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும். ஏனெனில் இந்த அரசாங்கம் எமக்கு ஒவ்வொரு கட்டமாக வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதிப்பதாக வாக்குறுதி அளித்துள்ளது.
நாங்கள் வாகனங்களை இறக்குமதி செய்ய தயாராக உள்ளோம். இதன் மூலம் மக்கள் நியாயமான விலையில் வாகனங்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இலங்கையில் சுமார் 600 வரையான வாகன இறக்குமதியாளர்கள் கடந்த 4 வருடங்களாக அதிக சிரமத்தை எதிர்நோக்கி வருகின்றனர். அவர்களுக்கும் நியாயம் கிடைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.