வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு
வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை அரசாங்கம் தளர்த்துவதற்கு முடிவு அதற்குரிய தயார் நிலையில் இருப்பதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
EconomyNextஇற்கு அண்மையில் வழங்கிய நேர்காணலின் போது மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பான தீர்மானங்களை அரசாங்கமும், நிதித்துறை அதிகாரிகளுமே மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மத்திய வங்கியின் பரிந்துரைகள்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
வாகன இறக்குமதி தொடர்பான பரிந்துரைகள் மத்திய வங்கியினால் அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் நடப்பு கணக்கில் மிகை நிலையைக் கொண்டிருந்தது.

அடுத்த ஆண்டு வாகன இறக்குமதி அனுமதி வழங்கப்படுமாக இருந்தால், மத்திய வங்கியின் நடப்பு கணக்கில் சிறியளவான பற்றாக்குறை ஏற்படக்கூடும், ஆனால் அது சமாளிக்கக்கூடியதே என குறிப்பிட்டுள்ளார்.
எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும் அதிர்ஷ்டம் கொண்ட டாப் 3 ராசியினர்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan