வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கினால் ஏற்படவுள்ள சிக்கல் : ரணில் வெளியிட்டுள்ள தகவல்
அடுத்து வரும் ஆண்டில் அன்னிய கையிருப்பு குறையும். வாகனங்கள் இறக்குமதி தொடங்கும் போது அது நடக்கும். ஆனால் கார் இல்லாமல் இருக்க முடியாது. வருவாயில் பெரும் பகுதி வாகன வரி மூலம் வருகிறது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
வாகன இறக்குமதி...
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டின் முற்பகுதி வரி உயர்வுகளால் கடினமான காலமாக இருந்தது. இப்போது பொருளாதாரம் மெல்ல மெல்ல நல்ல முறையில் முன்னேறி வருகிறது. முதன்மை வரவு செலவு திட்டத்தினை தேவைக்கு அதிகமாக பராமரிக்க முடிந்தது. எனினும், இந்த நடவடிக்கை தனியார் துறையை பாதிக்கும்.
சர்வதேச நாணய நிதியத்துடன் 6 மாதங்களுக்கு ஒருமுறை விவாதங்கள் நடத்தப்படும். அங்கு அதிக முன்னேற்றம் காணப்பட்டது.
வரிச் சிக்கல்களைத் திருத்த IMF சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகின்றது. சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கப்பாடுகள் காணப்படுவதுடன் இணக்கப்பாடுகள் எட்டப்படாத விடயங்கள் உள்ளன.
அடுத்து வரும் ஆண்டில் அன்னிய கையிருப்பு குறையும். வாகனங்கள் இறக்குமதி தொடங்கும் போது அது நடக்கும். ஆனால் கார் இல்லாமல் இருக்க முடியாது. அடுத்த ஆண்டு மத்தியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |